Categories: Cinema News latest news

ஓஹோ புகழில் அப்பா… பக்காவாக ப்ளான் போட்ட அக்கா… நான் மட்டும் என்ன தொக்கா? சௌந்தர்யா ஸ்கெட்ச்!

Soundarya Rajinikanth: ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த புகழை பயன்படுத்தி கொண்டு தன்னுடைய சம்பளத்தினை சூப்பர்ஸ்டார் உயர்த்தி இருக்கிறார். அதே நேரத்தில் இந்த டைமினை ஐஸ்வர்யா ஒரு வகையில் யூஸ் செய்ய சௌந்தர்யா ஒரு பக்கம் இறங்கி இருக்கிறார்.

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்லர். இப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கிட்டத்தட்ட 800 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. அண்ணாத்த படத்தின் மிகப்பெரிய ப்ளாப்பை தொடர்ந்து இந்த வெற்றி ரஜினிக்கே மிகப்பெரிய எனர்ஜியை கொடுத்தது.

இதையும் படிங்க: ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் இறங்கி செய்த வேலை!… என்னய்யா அம்புட்டு பாசமா?..

அதனால் தற்போது தொடர்ச்சியாக தா.சே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து லோகேஷ், சங்கர் இயக்கத்தில் தொடர்ச்சியாக தன்னுடைய அடுத்த படவேலைகளில் ரஜினிகாந்த் பிஸியாகி இருக்கிறார்.

அப்பாவின் இந்த புகழை யூஸ் செய்துக்கொள்ள  நினைத்த மூத்த மகள் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் அவரின் கதாபாத்திரத்தினை அதிகப்படுத்தினார். பரபரப்பாக வேலைகளை முடித்துக்கொண்டு விரைவில் இந்த படத்தினை டிசம்பருக்குள் வெளியிடும் முடிவில் இருக்கிறார்.

இதையும் படிங்க: நீ போ நான் இப்போ வர முடியாது… கறாராக தளபதி68 டீமை கழட்டிவிட்ட தளபதி…

ஐஸ்வர்யா இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன், விக்ராந்த் நடிக்க இருக்கிறார். தென் தமிழகத்தில் இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. விஷ்ணுவின் தாய் மாமனாக மூஸ்லீமான ரஜினி நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் அக்கா வழியில் இந்த நேரத்தில் மீண்டும் சௌந்தர்யா சினிமா பக்கம் இறங்குகிறார். அமேசன் நிறுவனத்துடன் இணைந்து இவர் தயாரிக்கும் வெப் சீரிஸில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார். நோவா அபிரஹாம் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. விரைவில் இத்தொடரின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily