×

கணவருடன் சுவாமி தரிசனம்.... பக்தி பரவசத்தில் ரஜினி மகள்

தற்போது செளந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.
 
09032e78-ff3b-430e-953b-2247f011770b

கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குநர்கள். இதில் மூத்தமகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

soun

இளைய மகள் செளந்தர்யா அஸ்வின் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். பின்னர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது செளந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.

இந்நிலையில் செளந்தர்யாவும், அவரது கணவர் விசாகனும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட அவர்கள்கள், கோவில் யானை தெய்வானைக்கு பழங்கள் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசி பெற்றனர்.

soun
 

From around the web

Trending Videos

Tamilnadu News