×

காந்த குரல் ஓய்ந்தது பாடும் நிலா கரைந்தது - பாடகர் எஸ்.பி.பி காலமானார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன் MGM மருத்துவமனை பாடகர் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததுவிட்டதாக அறிவித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த இசை பிரியர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள எஸ்பிபியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News