எஸ்பி பாலசுப்ரமணியன் இசை அமைத்த படங்கள்.. ரஜினியின் அந்தப் படமும் இவர் இசையமைத்ததா?

by Rohini |   ( Updated:2024-12-30 01:30:07  )
Spb
X

Spb

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40,000 பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன். இவருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது ஆறு முறை கிடைத்திருக்கிறது

முறையாக கர்நாடிக் இசையை இவர் பயின்றதும் இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றார் எஸ்.பி பாலசுப்ரமணியன் எந்த ஒரு பின்னணி பாடகரும் செய்ய முடியாத சாதனையை பாலசுப்பிரமணியன் செய்திருக்கிறார்.

ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்து பெரும் சாதனை புரிந்தவர் இவர்.ஆரம்பத்தில் ஒரு இசைக் குழுவில் தலைவராக இருந்த பாலசுப்பிரமணியம் அந்த குழுவில் இளையராஜா கிட்டார் வாசிப்பாளராக இருந்திருக்கிறார்.1966 ஆம் ஆண்டு வரை இளையராஜாவுடன் நிறைய கச்சேரிகளை நடத்தி இருக்கிறார் எஸ்.பி பாலசுப்பிரமணியம்.

பாடகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து மக்களின் பேராதரவினை பெற்றவர் இவர்.அதோடு சிறந்த இசை அமைப்பாளராகவும் பல படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். இவர் இசையமைத்த படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்

சத்யராஜ் கௌதமி ஆகியோர் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியன் பின்னணி இசை அமைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு நடிப்பில் வெளிவந்த உன்னை சரணடைந்தேன் திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியன் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அதைப்போல 1992 ஆம் ஆண்டு வெளியான ஊர்பஞ்சாயத்து திரைப்படத்திற்கும் இவர் தான் இசை அமைத்திருக்கிறார். அதேபோல 1991 ஆம் ஆண்டு இவரே நடித்து வெளியான திரைப்படம் சிகரம். இந்த திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். 1983 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான துடிக்கும் கரங்கள் திரைப்படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர்.

இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். மேலும் 1991 ஆம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கிய தையல்காரன் திரைப்படம். இந்த படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருப்பார்.இந்த படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர்.அதைப்போல 1992 ஆம் ஆண்டு நாகார்ஜுனா நடித்த போங்கடா நீங்களும் உங்க அரசியலும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்.

இதில் தையல்காரன் திரைப்படத்தில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அவரே இசையமைத்து அந்த படத்தில் அமைந்த ஐந்து பாடல்களும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story