×

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு? - அதிர்ச்சியில் திரையுலகம்

 
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு? - அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழில் இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜனநாதன். கம்யூனிச சிந்தாந்த்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது திரைப்படங்களிலும் அதை பிரதிபலித்து வருகிறார். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதம் உள்ளது.

jananthan

இந்நிலையில், நேற்று ஜனநாதன் நேற்று சுயநினைவின்றி தனது வீட்டில் மயங்கி கிடந்தார். அதைக்கண்ட அவரின் உதவியாளர்கள் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News