Categories: Cinema News latest news

விஜய் நாகரீக மனிதர்தானா? கோபத்தில் கொந்தளித்த எஸ்.பி.பி… அப்படி என்ன நடந்தது?

விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே அவர் தனது சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே மாபெரும் ஹிட் அடித்திருக்கின்றன. மேலும் பல முன்னணி பாடகர்கள் விஜய்யின் பாடல்களை பாடியிருக்கிறார்கள். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், “என்ன அழகு எத்தனை அழகு”, “ஆழகூரில் பூத்தவளே” போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.

Thalapathy Vijay

எஸ்.பி.பி. பொருத்தமில்லை

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ரசிகை ஒருவர் அவரிடம், “நடிகர் விஜய்க்கு நீங்கள் பாடிய பாடல், அவருக்கு பொருத்தமாக இல்லை என்ற காரணத்தை சொல்லி அதனை நீக்கிவிட்டார்களாமே, உண்மையா?” என கேட்டார்.

SP Balasubrahmanyam

அதற்கு பதிலளித்த எஸ்.பி.பி., “என்னிடம் இதற்கு முன் இந்த கேள்விகளை சிலர் கேட்டனர். ஆனால் அது உண்மையா இல்லையா என்று எனக்கே தெரியாது. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கவேண்டிய விஷயம். விஜய் இதை செய்திருந்தால், அவர் நிச்சயமாக இதனை செய்திருக்க கூடாது” என கூறினார்.

விஜய் நாகரீகமான ஆளாக இருந்தால்…

மேலும் அப்பேட்டியில் பேசிய எஸ்.பி.பி., “விஜய் நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் சின்ன பையனாக இருக்கும்போதே நான் அவருக்கு பாடியிருக்கிறேன். அப்போதே பொருத்தமாக இருந்தது. இப்போ அவருக்கும் வயசாகிட்டு வருதே. இப்போ பொருந்தலைன்னு எப்படி சொல்லமுடியும். அப்படி அவர் நினைத்திருந்தால் மிகவும் தவறு.

Thalapathy Vijay

விஜய் ஒரு நல்ல நாகரீகமான பையன், அவர் இப்படி செய்திருப்பார் என்று நான் எண்ணவில்லை. ஒருவேளை அவர் அப்படி செய்திருந்தால், அவர் அப்படி செய்திருக்க கூடாது” என கடுமையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோபத்தில் அனலாய் கொந்தளித்த டி.எம்.எஸ்… வீட்டிற்கே சென்று காலில் விழுந்த எம்.எஸ்.வி…

Arun Prasad
Published by
Arun Prasad