spb
தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இளையராஜா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானபோது, எஸ்.பி.பி. பாடகராக அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுக்கும் பாடியுள்ளார்.
அதன்பின் ரஜினி, கமல், மோகன் ஆகியோர் பீக்கில் இருந்த நேரத்தில் அவர்களுக்கும் பெரும்பாலான பாடல்களை பாடியது எஸ்.பி.பிதான். மேலும், பிரபு, சத்தியராஜ், கார்த்தி என பல நடிகர்களுக்கும் அருமையான மனதை மயக்கும் பாடல்களை பாடியுள்ளார். 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
spb
அதனால்தான் அவர் மரணமடைந்த போது ‘இந்த ஜீவன் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என அவர் பாடிய பாடல் வரிகளை வைத்தே சமூகவலைத்தளங்களில் பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்தனர். இளையராஜாவின் இசையில் மட்டும் பல ஆயிரம் பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இருவரும் ‘வாடா போடா’ நண்பர்களாகத்தான் இருந்தனர்.
ஆனால், இளையராஜவுக்கு ஒரு குணம் உண்டு. ஒரு பாடலை பாட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு பாடகரை வர சொல்லி, அந்த பாடகர் வரவில்லை எனில் அவருக்காகவெல்லாம் காத்திருக்க மாட்டார். இன்னொரு பாடகரை வைத்து ரிக்கார்டிங் செய்துவிடுவார். அப்படி பல பாடல்களை இழந்தவர்தான் எஸ்.பி.பி. சினிமாவில் பாடிக்கொண்டிருந்த போது வெளிநாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகளிலும் எஸ்.பி.பி பாடுவார். அதனால், அவருக்காக காத்திருக்காமல் மனோ, யேசுதாஸ் மற்றும் மலோசியா வாசுதேவனை வைத்து ராஜா அந்த பாடலை ஒலிப்பதிவு செய்துவிடுவார். இதுபோல் பலமுறை நடந்ததுண்டு.
mano
மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்து 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ‘இதயத்தை திருடாதே’. இந்த படத்தை தெலுங்கில் ‘கீதாஞ்சலி’ என்கிற பெயரில் எடுத்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பி பாடியிருப்பார். ஆனால், தமிழில் மனோ பாடியிருப்பார்.
அதிலும், ஓ பிரியா பிரியா பாடல் ரசிகர்களிடம் பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடலை பாட எஸ்.பி.பியை ‘நாளைக்கு காலையில் சிக்கிரம் வா’ என ராஜா சொனனராம். ஆனால், எஸ்.பி.பிக்கு தொண்டை கட்டிக்கொண்டது. எனவே, அவர் செல்லவில்லை. எனவே மனோவை வைத்து அந்த பாடலை ராஜா ரிக்கார்டிங் செய்துவிட்டார். இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலுக்கு பின்னர்தான் பாடகர் மனோ பல பாடல்களை பாடி முன்னணி பாடகராகவும் மாறினார்.
இந்த பாடலை தமிழில் பாடமுடியவில்லையே என்கிற வறுத்தம் எஸ்.பி.பிக்கு பல வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…