×

நீங்கா நினைவாய் வாழும் சின்னக்கலைவாணர் -  விவேக்குக்கு சிறப்பு மரியாதை (வீடியோ)
 

58 வயதான விவேக்கின் அந்த திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 
bc8fa415-bd1d-4c3f-8618-919afa5f08ce

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்திருந்தார். 

யாரும் சற்றும் எதிர்பாராத தருணத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. 

இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகு தான் தெரிய வரும் என, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.  விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை அவரது உயிர் பிரிந்தது. 

58 வயதான விவேக்கின் அந்த திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் விவேக்கை நினைவுக்கூறும் வகையில் விஜய் தொலைக்காட்சி ‘சின்னக்கலைவாணர்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதில் பிரபலங்கள் அவரை பற்றி பேசியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News