Spider Man Brand New Day Box Office : பாக்ஸ் ஆபிஸில் சாகசம் செய்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
10 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாய் ரெடியாகியுள்ள புதிய படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).
இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சாகசம் செய்யும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கிறார்.
மேலும், முக்கிய கேரக்டர்களில் ஜெண்டயா, மார்க் ரஃபலோ, ஜேக்கப் படலோன், ஜான் பெர்ன்தால் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரபல இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் தான் இயக்கியிருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி இந்தியாவிலும், ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.455.33 கோடியும், உலக அளவில் ரூ.14,500 கோடியும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.