Spider Man Brand New Day Box Office : வசூல் மழையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
Aug 2, 2026, 09:06 IST
3 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. அதிக எக்ஸ்பெக்டேஷனுடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இந்தியாவில் வெளி வந்த படம் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).
ஹாலிவுட் படமான இது வெளிநாடுகளில் நேற்று முன்தினம் (ஜூலை 31) தான் வெளிவந்தது. இதில் ஸ்பைடர் மேனாக பறந்து சாகசம் செய்திருப்பவர் நம்ம டாம் ஹாலண்ட் தான்.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதிகம் ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்த்து திரையரங்கு போன ரசிகர்களை பெரிதாக ஏமாற்றி விட்டார்கள்.
இருப்பினும் ஒருசில மார்வெல் மற்றும் ஸ்பைடர் மேன் ரசிகர்கள் வந்த வரைக்கும் போதும் என்று கொண்டாடி வருகிறார்கள். தற்போது, இப்படம் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.211.27 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
