Spider Man Brand New Day Box Office : 300 கோடி கிளப்பில் இணைந்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

 
Spider man brand New Day

4 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மார்வெல் படத்தை பார்த்து வளர்ந்தவர்கள் தான்.

எப்படியாவது ஸ்பைடர் மேனை பெரிய திரையில் பார்த்து கொண்டாடிட வேண்டும் என்று வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக கடந்த வாரம் ஜூலை 30-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியான ஹாலிவுட் படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).

இதில் நடிகர் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேன் ஆக நடித்து மாஸ் காட்டியுள்ளார். ஹீரோயினாக ஜெண்டயா நடித்துள்ளார். இதை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் தான் இயக்கியுள்ளார்.

இதற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.306.37 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

From Around the web