Spider Man Brand New Day Box Office : 10,000 கோடியை நெருங்கும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
5 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஹீரோ கேரக்டரான ஸ்பைடர் மேனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இந்த கேரக்டரை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி தான் புதிதாக உருவாகியிருக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) படத்துக்கும் இருந்தது.
கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஜூலை 30-ஆம் தேதியும், வெளிநாடுகளில் ஜூலை 31-ஆம் தேதியும் இந்த படம் வெளியிடப்பட்டது. டாம் ஹாலண்ட் நடித்திருக்கும் இப்படம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை தான்.
ஆனாலும், வசூல் ரீதியாக ஸ்பைடர் மேன் ஒரு குறையும் வைக்கவில்லை. ஆம். கடந்த 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.336.91 கோடியும், உலக அளவில் ரூ.9550 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் ரூ.10,000 கோடி கிளப்பில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
