Spider Man Brand New Day Box Office : 10,000 கோடி கிளப்பில் இணைந்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

 
Spider man brand new day

6 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் சூப்பர் ஹீரோ படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).

இதில் சூப்பர் பவர் கொண்ட ஸ்பைடர் மேன் ரோலில் டாம் ஹாலண்ட் வலம் வந்துள்ளார். இப்படம்  

கடந்த ஜூலை 30-ஆம் தேதி இந்தியாவிலும், ஜூலை 31-ஆம் தேதி வெளிநாடுகளிலும் ரிலீஸானது.

இந்த படத்தில் டாம் ஹாலண்டுக்கு ஜோடியாக ஜெண்டயா நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் மார்க் ரஃபலோ, சேடி சிங்க், ஜான் பெர்ன்தால், ஜேக்கப் படலோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் மார்வெல் ஃபேன்ஸிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 6 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.362.61 கோடியும், உலக அளவில் ரூ.10,925 கோடியும் கல்லா கட்டி சாதனை படைத்துள்ளதாம். 

From Around the web