Spider Man Brand New Day Box Office : பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
Aug 6, 2026, 09:59 IST
ஒரு வாரத்தில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் ஜோடி டாம் ஹாலண்ட், ஜெண்டயா நடித்துள்ள புதிய படம் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).
இந்த படம் ஆங்கிலம் மொழி மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளி வந்தது.
கிறிஸ் மெக்கென்னா - எரிக் சோமர்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார்.
மார்வெல் ரசிகர்களை முழுமையாக இப்படம் திருப்தி படுத்தவில்லை என்றாலும் வசூலில் தூள் கிளப்பி வருகிறது. அதன் படி கடந்த 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.380.78 கோடியும், உலக அளவில் ரூ.11,750 கோடியும் வசூலித்திருக்கிறது.
