Spider Man Brand New Day Box Office : இந்தியாவில் மட்டும் 400 கோடி வசூலித்ததா ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே?
Aug 7, 2026, 10:06 IST
8 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோ படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 'மார்வெல் ஸ்டுடியோஸ்' நிறுவனம்.
இந்த ஆண்டில் (2026) இவர்கள் தயாரித்துள்ள புதிய படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).
டாம் ஹாலண்ட் 'ஸ்பைடர் மேன்' எனும் சூப்பர் ஹீரோ கேரக்டரில் வந்து செய்யும் அதிரடியான சாகசங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை குஷிப்படுத்த இப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இந்தியாவிலும், ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியானது. தற்போது, இந்த படம் கடந்த 8 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.400.21 கோடியும், உலக அளவில் ரூ.12,500 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
