Spider Man Brand New Day Box Office : 15,000 கோடியை நெருங்கிய ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

 
Spider man brand new day

9 நாட்களில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் 'ஐ ஆம் நாட் எ ஹிப்ஸ்டர், ஷார்ட் டெர்ம் 12, ஜஸ்ட் மெர்சி' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.

மார்வெல் படமான 'ஷாங்-ச்சி அன்ட் த லெஜன்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்'-ஐயும் இவர் தான் இயக்கியிருந்தார். இவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய மார்வெல் படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).

இதில் ஹீரோவாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இப்படம் வெளியானது. வெளிநாடுகளில் அதற்கு அடுத்த நாள் (ஜூலை 31-ஆம் தேதி) தான் வெளியானது. 

இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 9 நாட்களில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.418.23 கோடியும், உலக அளவில் ரூ.13,500 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 15,000 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web