எதிர்பார்ப்பை எகிற வைத்த 'Spider-Man: Brand New Day' படத்தின் ஃபைனல் ட்ரெய்லர்!
ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day). இதில் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் வலம் வரப்போகிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் ஜெண்டயா, மார்க் ரஃபலோ, ஜேக்கப் படலோன், ஜான் பெர்ன்தால் ஆகியோர் நடித்துள்ளனர். இதை இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை வருகிற ஜூலை 30-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
India, you ready? 🕷️
— Sony Pictures India (@SonyPicsIndia) July 21, 2026
It’s about to be a Brand New Day. Get your tickets now! #SpiderManBrandNewDay swings into cinemas on July 30, in English, Hindi, Tamil, Telugu, Malayalam & Kannada.https://t.co/XMpLruMUyQ
இந்நிலையில், இன்று (ஜூலை 21-ஆம் தேதி) இதன் ஃபைனல் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
