Spider Man Brand New Day ஐமேக்ஸ் திரையரங்குகளில் எப்போது ரிலீஸ்?

 
Spider man brand new day

ஹாலிவுட்டில் உருவாகும் மார்வெல் படங்களின் வரிசையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இந்தியாவிலும், ஜூலை 31-ஆம் தேதி வெளிநாடுகளிலும் வெளியான படம் தான் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day).

இதில் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இப்படம் மார்வெல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸிலும் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் படமான 'தி ஒடிசி' (The Odyssey) கடந்த ஜூலை 17-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் முடிவடையப்போகிறது. இதனால், வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

From Around the web