இந்தியாவில் வசூலில் முதலிடம் பிடித்த Spider-Man- மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

 

ஹாலிவுட்டின் பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்றான ஸ்பைடர் மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியான படம் Spider-Man: Brand New Day. முந்தைய ஸ்பைடர்மேன் படங்களை ஒப்பிடுகையில் இப்படம் விமர்சன ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் வசூலி எவ்விதத்திலும் இந்த விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு இந்திய ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பு, இப்படத்தின் வசூலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் வசூல் வேகமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வசூலில் முதலிடம் பிடித்த Spider-Man- மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இதனிடையே, பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய The Odyssey திரைப்படமும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வசூலை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாகும்போது, அவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பும் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web