×

கனிமொழி -உதயநிதி ஆதரவாளர்களிடையே புகைச்சல்... திமுகவில் தீராத பஞ்சாயத்து....

 

‘விடியலை நோக்கி’ மற்றும் ‘ஸ்டாலினின் குரல்’ ஆகிய தலைப்பில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. இதன் விளைவாக திமுகவில் உதயநிதி மற்றும் கனிமொழி ஆதரவாளர்களிடையே புகைச்சல் எழுந்துள்ளது.

ஒருபக்கம்  திருச்சி சிவா, லியோனி, தயாநிதி மாறன் என பலரும் பிரச்சாரம் செய்து வந்தாலும் உதயைநிதி மற்றும் கனிமொழி பிரச்சாரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கனிமொழி ஆதரவாளர்கள் களத்தில் இறங்க, மறுபக்கம் உதயநிதி ஆதரவாளர்கள் அவரை தூக்கி பிடிக்க திமுகவில் புகைச்சல் எழுந்துள்ளது.

கனிமொழி ஆதவராளர்கள் பேனர், பதாகைகள், சுவர் மற்றும் பத்திரிக்கைகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க, உதயநிதியின் ஆதரவாளர்களும் அதையே செய்கின்றனர். ஒரு உதயநிதியின் ஆதரவாளர்கள் கனிமொழியையும், கனிமொழி ஆதரவாளர்கள் உதயநிதியையும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

stalin


இந்த பஞ்சாயத்து ஸ்டாலினின் காதுக்கு எட்ட அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளதாம். உதயாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்லுங்கள் என மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினிடம் கூற என்ன செய்வதென்று புரியாமல் சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கட்சி பேனர், பதாகைகள் மற்றும் விளம்பரங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தனது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெறவேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டார். ஆனாலும், இந்த பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லையாம்.

ஒரு புறம் விடியலின் குரல் நிகழ்ச்சிக்கான அனைத்து செலவுகளும் நிர்வாகிகள் தலையில் கட்டப்படுவதால் அவர்கள் புலம்பி வருகிறார்களாம். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக வேட்பாளரை தேர்வு செய்தால் கூட அவர்கள் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். அது தேர்தல் செலவு கணக்கில் வந்துவிடும். ஆனால், தற்போது நாம்தான் வேட்பாளாரா என்பதே புரியாமல் திமுக நிர்வாகிகள் புலம்பிகொண்டே செலவுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.  இது திமுக தலைமையின் காதுக்கு எட்டவில்லை எனில் சிக்கலில் முடியும் எனக்கூறப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News