Connect with us

Cinema News

ரசிகர்களை கொலை நடுங்க வைக்க மீண்டும் அவர்கள் வருகிறார்கள்.! குதூகலமான அந்த அறிவிப்பு இதோ.!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற வெப்சீரிஸ் என்றால் அது  ஸ்குட் கேம் சீசன் 1 ( Squid game ). இது மணி ஹெய்ஸ்ட் அளவுக்கு  ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.

அதாவது இந்த சீரிஸில் சிகப்பு, பச்சை என 2 குரூப் உண்டு.  விளையாட்டுக்கு சில விதிமுறைகள் உண்டு. அதனை மீறினால், ஒரு ரோபோட் பொம்மை கொலை செய்யும். விளையாட்டில் என்ன சொன்னாலும் அதை செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால் இந்த பொம்மை அவர்களை கொடூரமாக கொலை செய்துவிடும்.

இப்படி அந்த விளையாட்டில் எப்படி யார் யாரெல்லாம் தப்பித்தார்கள்? என்பதை முதல் சீசனில் காண்பித்து விட்டார்கள். ரசிகர்களை கதிகலங்க வைத்த இந்த  வெப் சீரிஸ் மீண்டும் தயாராக உள்ளதாம்.

இதையும் படியுங்களேன் –  டேய்!..உனக்கு குழந்தை இருக்குடா!…நடிகையிடம் ஜொள்ளு விட்ட சதீஷை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!…

இதனை குறிப்பிட்டு அந்த வெப்சீரிஸ் இயக்குனர் மற்றும் நெட்பிளிக்ஸ் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களாக இந்த கதையை உருவாக்கினோம். 12 நாட்களில் இந்த வெப்சீரிஸை ஷூட் செய்து முடித்தோம். தற்போது மீண்டும் இதனை உருவாக்க உள்ளோம். அடுத்த சீசன் விரைவாக வர உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். முதல் சீசன் போல இந்த சீசனும் ரசிகர்களை மிகவும் கவரும் என்று ஸ்குயட் கேம் சீசன் 2 குழு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சீசனில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top