×

Simplicity'ல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல...கேக் கூட வெட்டாமல் பர்த்டே கொண்டாடிய ஸ்ரீ திவ்யா!
 

சிம்பிளா பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஸ்ரீ திவ்யா!
 
 
Simplicity'ல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல...கேக் கூட வெட்டாமல் பர்த்டே கொண்டாடிய ஸ்ரீ திவ்யா!

தெலுங்கு சினிமாவின் குழந்தை நட்சத்திரமான நடிகை ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் ரவி பாபு இயக்கதில் 2010 ஆண்டு வெளியான மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. 

பின்னர் தமிழில்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.பிறகு பென்சில்,  ஈட்டி, காக்கி சட்டை , வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் மேக்கப் போடாமல் ஹீரோயின் என்ற பந்தா காட்டாமல் சிம்பிளாக இருந்து வரும் ஸ்ரீ திவ்யா தற்போது கேக் கூட வெட்டாமல் சிம்பிளான தனது 28 வது பிறந்தாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News