Categories: Cinema News latest news

இருந்தாலும் வெற்றிமாறன் ரெம்ப ஸ்ட்ரிக்ட் தான்… அஜித் பட இயக்குனரை.? கதற வைத்த சம்பவம்.!

பொதுவாக ஒரு சிறிய பட்ஜெட் அறிமுக இயக்குனர் தனது படங்கள் வெளியில் தெரிய வேண்டும், ரசிகர்களிடம் சரியாக போய் சேரவேண்டும் என பெரிய ஹிட் பட இயக்குனர்கள், நடிகர்களிடம் தங்கள் பட போஸ்டர் டீசரை வெளியிட்டுகேட்பார்கள்.

அப்படி தான் 8 தோட்டாக்கள் எனும் தரமான படத்தை இயக்கிய பின்னர் இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசைப்பட்டுள்ளார். அதன் படி, இயக்குனர் வெற்றிமாறனிடம், தனது முதல் பட 8 தோட்டாக்கள் பட டீசரை வெளியிட கேட்டுள்ளார்.

படத்தின் டீசரை பார்த்துவிட்டு, இது ஒரு ஆங்கில பட சாயலில் இருக்கிறது என சந்தேகமாக கேட்டுள்ளார் வெற்றிமாறன். அதற்கு ஸ்ரீகணேஷ் இது அப்படி இல்லை சார். ஒரு சில காட்சிகள் வந்திருக்கலாம் ஆனால் எனது படம் வேறு, இருந்தாலும், நான் நன்றி என கடைசியில் டைட்டில் கார்டில் அந்த ஆங்கில பட பெயரையும் போட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – உண்மையில் சொல்லி அடிச்ச கில்லி.. விஜய் இல்ல.? இவர் தான்.! வெளியான சூப்பர் சீக்ரெட்…

இருந்தாலும் நம்பாமல் அந்த டீசர் விடியோவுக்காக, படத்தின் டைட்டில் கார்டை போட்டோ எடுத்து அனுப்புங்கள் பிறகு ரிலீஸ் செய்து தருகிறேன் என கூறியுள்ளார் வெற்றிமாறன். அதன் படி, தனது டைட்டில்  கார்டை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். அதன் பிறகே வெற்றிமாறன டீசர் வெளியிட்டு உள்ளார்.  உண்மையில், இயக்குனர் வெற்றிமாறனும் அப்படி தான் , தான் எந்த படத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆனோமோ அதனை குறிப்பிட்டு விடுவார்.

8 தோட்டாக்கள் பட இயக்குனர் தான் அண்மையில் அதர்வா நடிப்பில் வரவேற்ப்பை பெற்ற குருதி ஆட்டம் படத்தை இயக்கியவர். இவர் தான் அஜித்தின் 63வது திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்தன. அது பற்றி ஸ்ரீகணேஷ் கூறுகையில், அஜித் சாரிடம் கதை கூறியுள்ளேன். அது என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் அதிகாரபூர்வமாக கூறவேண்டும் என கூறியுள்ளார். அஜித்தின் 62வது படம் முடிந்த பிறகு பார்க்கலாம் எப்போது அறிவிப்பு வருகிறது என்று.

Manikandan
Published by
Manikandan