×

துரத்தும் தயாரிப்பாளர்கள்... ஓட்டம் பிடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி... என்ன காரணம் தெரியுமா?

ஜான்வி கபூர் பாலிவுட் பக்கமே இருப்பாரா அல்லது தென்னிந்திய படங்களிலில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Janhvi-Kapoor-1200

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கயமான நபராக பார்க்கப்படுகின்றார்.

இந்நிலையில் அவரை தற்போது ஒரே சமயத்தில் மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம். மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோரது படங்களும் அதில் அடக்கம். 

மேலும் எப்படியாவது அவருக்கு அதிக சம்பளம் கொடுத்தாவது தங்களது படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்களாம்.

இதன்பின் ஜான்வி கபூர் பாலிவுட் பக்கமே இருப்பாரா அல்லது தென்னிந்திய படங்களிலில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

எது எப்படியோ ஸ்ரீதேவியின் வாரிசு என்பதால் திரைத்துறையில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News