×

குழந்தை இருக்குன்னா நம்ப மாட்டாங்க! - அசத்தல் லுக்கில் விஜயகுமார் மகள்

 
குழந்தை இருக்குன்னா நம்ப மாட்டாங்க! - அசத்தல் லுக்கில் விஜயகுமார் மகள்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். நடிகை லதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 5 மகள்கள். அதில் பெரும்பாலானோர் திரைப்படங்களில் நடித்து விட்டனர். மகன் அருண் விஜய் பற்றியும், வனிதா விஜயகுமார் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். அருண் விஜய் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 

விஜயகுமார் மகளில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவிதான். சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்ன். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஸ்ரீதேவி.

இந்நிலையில், வித்தியாசமான ஒரு உடையில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News