×

இதுவரை இல்லாத காஸ்ட்யூமில் ஸ்ரீதேவி மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை இதுவரை கவர்ச்சியான உடையில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து உள்ளனர். ஜான்வி கபூர் எங்கு வெளியே சென்றாலும் அவர் உடலின் முக்கால்வாசி பாகங்கள் தெரியும் வகையில் தான் உடை உடுத்தி இருப்பார். 

 

இந்த நிலையில் திடீரென பவ்வியமாக பாவாடை தாவணி உடையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தோற்றமளித்தது அனைவருக்கும்ஆச்சரியத்தை அளித்துள்ளது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஜான்வி கபூர் பாவாடை தாவணி உடையில் உடல் முழுதும் மறைத்து இருந்தவாறு வருகை தந்திருந்தார் 

திருமலைக்கு நடைபயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் விஐபி சிறப்பு தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு  தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீதேவியின் மகள் பாவாடை தாவணியில் வந்ததை திருப்பதியில் சாமி கூட வந்த அவரது ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தடக்’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அவர் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி வந்ததாகவும் கூரப்படுகிறது. மேலும் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News