Categories: Cinema News latest news

10 லட்சம் பரிசு வென்ற சூப்பர் சிங்கர் வின்னர் – யார் யாருக்கு எவ்வளவு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி மவுஸ் உள்ளது. 8 சீசன் வரை நடந்து முடிந்திருக்கும் இந்த ரியாலிட்டி ஷோ ஜூனியர் சூப்பர் சிங்கர், சீனியர் சூப்பர் சிங்கர் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த 8வது சீசனின் இறுதி சுற்றில் பாடகர் ஸ்ரீதர் சேனா முதலித்தை வென்றார். வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் இறுதி சுற்றில் நுழைந்த ஸ்ரீதர் சேனா மக்களின் வாக்கு அடிப்படையில் 25% சதவீதம் வாக்குகளை தன்வசப்படுத்தி முதல் இடத்தை பிடித்து ரூ. 10.லட்சம் பரிசுத்தொகை வென்றார்.

இரண்டாவது இடத்தை பிடித்த பரத் ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அதே போல் மூன்றாவது இடம் பிடித்த அபிலேஷ் ரூ. 2 லட்சம் பரிசு தொகை வென்றார். இதில் பெரும்பலான மக்களுக்கு பிடித்த முத்துச்சிப்பி மூன்றாவது இடம் கூட பிடிக்காதது வருத்தத்தை கொடுத்துள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்