×

மன்னித்து விடுங்கள் விஜய் சேதுபதி - மகளை மிரட்டிய வாலிபர் கோரிக்கை

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, அவரும் அப்படத்தில்லிருந்து விஜய்சேதுபதி விலகினார்.

இந்த விவகாரம் சர்ச்சையான போது டிவிட்டரில் ஒரு வாலிபர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் கொடுத்து மிகவும் ஆபாசமாகவும், விக்கிரமாகவும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதை திமுக எம்.பி.  கனிமொழி உட்பட பலரும் கண்டித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வாலிபர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், அந்த நபரை இலங்கையை சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, அந்த நபர் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுபோன்ற தவறை என் வாழ்நாளில் செய்ய மாட்டேன்.  தங்கை குறித்த என் தவறான பதிவிற்கு என்னை மன்னித்துவிடுங்கள் விஜய் சேதுபதி அண்னா’ என அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அவரின் தாயும் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதானால் தனது மகனின் வாழ்வே பாதிக்கும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News