×

அப்பா மாதிரி நானும்... அதுவே இன்னும் புரியலை.. இதுல நீ வேறையாம்மா...

தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம் நடிகை ஸ்ருதி ஹாசன்.
 
829182-790712-683831-shruti-haasan

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனை போல், நடிகை சுருதிஹாசனும் இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் ஆர்வம் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுருதிஹாசன், தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.

ஆம் ஓடிடி தளத்துக்காக உருவாகும் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News