×

வாழ்க்கையில் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்... வருத்தப்படும் ரியோ மனைவி!

பிக்பாஸ் 4வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் ரியோ ராஜ். சாதாரண குடும்பத்தில் பிறந்து பின் பல கஷ்டங்களுக்கு பிறகு தொகுப்பாளராக களமிறங்கினார்.

 

அதில் ஜெயித்த அவர் சீரியல் பக்கம் வந்து புகழ் பெற்றார், இப்போது படங்களில் நடித்தும் வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ரியோ விளையாட்டை அவர் ஸ்டைலில் விளையாடி வருகிறார்.

அண்மையில் அவரது மனைவி உன்னை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருக்க கூடாது என மனம் வருந்தி போஸ்ட் போட்டிருந்தார்.

தற்போது ரியோவின் நண்பர் பிரிட்டோ ஒரு பேட்டியில், என்னை பொறுத்த வரை ரியோ நன்றாக தான் விளையாடுகிறார். அவர் கோபப்படும் இடத்தில் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கொஞ்சம் வருத்தப்படுகிறோம்.

நாங்கள் அனைவரும் அவரது மனைவி ஸ்ருதியை மன வருத்தத்தில் இருந்து வெளியேற உதவி வருகிறோம். ரியோவை பற்றி தெரியாத சிலர் ஸ்ருதிக்கு மோசமான மெசேஜ் மற்றும் சில தொந்தரவுகளை இரவில் கொடுத்து வருகிறார்கள்.

அதனாலேயே அவர் ரியோவை பிக்பாஸிற்கு அனுப்பியிருக்க கூடாது என வருந்தியுள்ளார் என்று பிரிட்டோ கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News