×

ரியோ பற்றி ஸ்ருதி வெளியிட்ட வீடியோ... பிக்பாஸ் நேரத்தில் இது தேவையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஸ்ருதி. நேற்றைய தினம் ரியோ பிக்பாஸில் கேமராவின் முன் அவரது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் செல்வதற்கு முன்பாகவே தனது மனைவியின் பிறந்தநாளுக்கு, அவர்கள் கடந்து வந்த பாதையை ஒரு அழகிய அனிமேட்டட் வீடியோவாக செய்து வைத்துள்ளார் அவர். 

இந்த வீடியோவை பார்த்த ஸ்ருதி மிகவும் நெகிழ்ச்சிஅடைந்துள்ளார். அவர் கூறும்போது "இந்த வீடியோவை பகிரலாமா, வேண்டாமா என்று நினைத்தேன். ஆனால் எங்கள் அன்பானவர்களுக்காக இதை பகிர வேண்டும் என்று எனக்கு தோன்றியது. இதை விட சிறந்த பரிசு இல்லை" என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News