Categories: Cinema News latest news

அஜித்துக்கு பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மரணம்…

தமிழ் சினிமாவில் அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. அஜித்தை வைத்து வாலி, முகவரி, வில்லன், வரலாறு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

அதேபோல் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சக்கரவர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரின் மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் இப்போது நேபாளத்தில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

எனவே, இவருக்கு அஞ்சலி செலுத்து வருவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
சிவா