Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அமரன் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீஸாக இருக்கும் திரைப்படம் அமரன். இப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..
இப்படத்தில் முகுந்த் என்ற வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதுவரை காமெடி கலந்த ரோலில் மட்டுமே பார்த்து வந்த சிவகார்த்திகேயன் டெரரான ரோலில் போர்களத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் சிவாவின் நடிப்பில் பலராலும் பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னால் இருக்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் இந்த கதையை ராஜ்கமல் பிலிம்ஸில் சொன்ன போது உடனே ஓகே செய்துவிட்டனராம். ஆனால் இப்படத்தின் ஹீரோவாக ஒரு புதுமுகத்தினை நடிக்க வைக்கலாம் என்பது ராஜ்குமார் பெரியசாமியின் முடிவாக இருந்து இருக்கிறது.
இதையும் படிங்க: வச்சாங்கே மொத்தமா ஆப்பு! வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து அடுத்த விக்கெட்டும் காலி.. இதுதான் காரணமா?
கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து இருக்கிறது. இன்னும் சாய் பல்லவி மற்றும் சிவா இடையேயான சில காட்சிகள் மட்டுமே இன்னும் மீதம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பாதியில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…