SSMB29: ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்டம்! போஸ்டரிலேயே பயத்தை காட்டுறாரே.. அடுத்த வேட்டைக்கு ரெடியா?
ராஜமவுலி இயக்கும் ஒரு படத்தில் நடிகர் பிரத்விராஜ் கும்பா என்ற ஒரு கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜமவுலி அடுத்து மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு அதிரடி சாகச கதையாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை பற்றி நவம்பர் 15 ஆம் தேதி ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு சிறப்பு நிகழ்வில் புதிய தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இவருடைய இயக்கத்தில் மிகப்பெரிய படைப்பாக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பாகுபலி..
இரண்டு பாகங்களாக வெளியான அந்தப் படம் உலக அளவில் பெரிய வசூலை பெற்று சாதனை படைத்தது. இன்று வரை அந்த படத்திற்கு ஈடு இணை வேறு எந்த படங்களும் இல்லை என்று தான் ரசிகர்களும் கூறி வருகிறார்கள். இதுவரை தமிழ் ரசிகர்கள் பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் தான் என்று நினைத்திருந்த நிலையில் பாகுபலி திரைப்படம் வந்த பிறகு உலக அளவில் பிரம்மாண்டமான படைப்பை தருபவரில் ராஜமவுலியை விட சிறந்தவர் யாருமில்லை என தமிழ் ரசிகர்கள் உட்பட அனைவருமே கூறி வருகிறார்கள்..
அந்த வகையில் மற்றும் ஒரு பிரம்மாண்ட படைப்பாக தர இருக்கிறார் ராஜமவுலி. அதுதான் இந்த SSMB 29 திரைப்படம். இந்த படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரித்திவிராஜ்.. அவருடைய போஸ்டர் தான் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றி ராஜமவுலி அவருடைய எக்ஸ் பக்கத்தில் கூறும் பொழுது பிரித்விராஜ் வைத்து முதல் ஷாட்டை எடுத்து முடித்ததும் அவரிடம் சென்று நான் பார்த்த நடிகர்களில் மிகச் சிறந்த நடிகர் நீங்கள் தான் இன்று கூறினேன்..

இந்த இரக்கமற்ற கொடூரமான வில்லத்தனமான கும்பா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததற்கு என்னுடைய ஆக்கபூர்வமான நன்றி என்று ராஜமவுலி தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார். அந்த போஸ்டரில் பிரித்வி ஒரு நாற்காலியில் அமர்ந்தவாரு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த நாற்காலியில் அமர்ந்ததற்கும் நன்றி என்றும் ராஜமவுலி தெரிவித்திருக்கிறார். இதற்கு பிரித்விராஜ் தன்னுடைய பதிலாக இது ஒரு மிகப்பெரிய மரியாதை சார். இந்த பைத்தியகாரத்தனமான பயணத்தின் மீதமுள்ள பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
