×

வறுமையி்ல் வாடிய பாகவதர் பேரன்.. உடனே வீடும் பணமும் கொடுத்த முதல்வர்..

சாய்ராமை வரவழைத்து ரூ. 5 லட்சமும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஆணையைும் ஸ்டாலின் வழங்கினார்.
 
54404546-6221-4c57-a7bc-0248fe93cb79

பழம்பெரும் நடிகரான தியாகராஜ பாகவதர் தான் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார். இந்நிலையில் அவரின் பேரன் சாய்ராம் தங்கள் குடும்பம் வறுமையில் வாடுவதாக தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை மனு அளித்தார்.

சாய்ராமின் நிலைமை குறித்து செய்திகள் வெளியாகின. மேலும் சமூக வலைதளங்களிலும் பலரும் சாய்ராம் பற்றி பேசினார்கள். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சாய்ராமை வரவழைத்து ரூ. 5 லட்சமும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஆணையைும் ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது, எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திரக் கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார்.

அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் மிக பிரபலமாக அக்காலகட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News