×

துணை முதல்வர் பதவி கேட்கும்  காங்கிரஸ்- நெருக்கடியில் ஸ்டாலின்

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் துணை முதல்வர் பொறுப்பை கேட்பதாக சொல்லப்படுகிறது.

 

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் துணை முதல்வர் பொறுப்பை கேட்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக சமீபத்தில் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார்.தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கூட்டணிக் கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரஸ் தங்களது அரசியல் சக்தியை தமிழகத்தில் பலப்படுத்த முயன்றுவருகிறது.

திமுக தரப்பில் மிக மிக அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகள் வரைதான் காங்கிரஸுக்கு தர முடியும் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் 80 தொகுதிகள் வரை கேட்கிறது. இதனால் திமுக திக்கு தெரியாமல் முழித்து நிற்கிறது. ராகுல் காந்தியின் அலை தமிழகத்தில் தற்போது அடித்துவருகிறது, மேலும் இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தி  நல்ல வரவேற்பபை பெற்றுள்ளார். மேலும் தினேஷ் குண்டுராவ் தற்போது  தமிழகத்தின் மேலிடப் பொருப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளதால்,மீண்டும் காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியாக மாறிவருவருகிறது. இதனால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார்.

மேலும், தென்மாவட்டங்களில் எப்போதுமே காங்கிரஸுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News