×

திருடுப் போன நகைகள்… தற்கொலை செய்து கொண்ட உரிமையாளர் – கடைசியில் ஏற்பட்ட திருப்பம் !

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன் என்ற துணிக்கடை வியாபாரி நகைக் காணவில்லை என நாடகம் ஆடி கடைசியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குத்புதீன் என்ற துணிக்கடை வியாபாரி நகைக் காணவில்லை என நாடகம் ஆடி கடைசியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே ராமநாதபுரம் அருகே துணிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு கடைசியில் வீட்டில் இருந்த 126 சவரன் நகைகள் திருடுபோய்விட்டதாக போலிசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் வீட்டுக்குள் வந்து நகையை திருடிச் சென்றதற்கான எந்த தடமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வழக்கின் முக்கியத் திருப்பமாக குத்புதீன் தற்கொலை செய்துகொண்டது அமைந்தது. இதையடுத்து அவரது கடையில் நடத்திய சோதனையில் நகை அடமான சீட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வீட்டில் இருந்த நகைகளைத் திருடி வங்கியில் அடகு வைத்துள்ளார்.

விசாரணையில் தாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் இப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News