×

புயல் உருவாகிடுச்சு... மழை கொட்ட போகுது!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள பகுதி புயலாக மாறுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்பொழுது இது ஒரிசாவில் பாரதிப் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்து 100 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை இது புயலாக வலுப்பெறும்.

இப்போதைய நிலவரப்படி நாளை வடமேற்கு திசையில் நகரும். அதன் பின் 18, 19 தேதிகளில் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்க கடற்கரையை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்கள் தெற்கு வங்கக் கடல் பகுதிக்கு 16, 17 தேதிகளில் செல்ல வேண்டாம். மேலும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு 17, 18 ஆகிய தேதிகளிலும், வடக்கு வங்கக் கடல் பகுதிக்கு 19, 20 ஆகிய தேதிகளில் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News