ஜெயிலர் 2 கொண்டாட்ட நிகழ்ச்சியில் சந்தானம்!.. நடந்தது என்ன?..
ரஜினியின் நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரூ.800 கோடி வசூலை நெருங்கும் என சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமுடு, சத்ருகன் சின்கா மற்றும் வித்யாபாலன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர் 2 படம் உருவாகிக்கொண்டிருந்த போது இந்த படத்தில் சந்தானமும் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் படம் வெளியான பின் இந்த படத்தில் சந்தானம் இல்லை. இந்நிலையில் ஜெயிலர் 2 பட சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது வித்யா பாலனின் பிறந்த நாளை படக்குழு கொண்டாடியது.
அதில் ரஜினிம் வித்யாபாலன், எஸ்.ஜே.சூர்யா.நெல்சன், சந்தானம் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். ஜெயிலர் 2-வில் சந்தானம் நடித்டிருக்கிறார்.. ஆனால், அந்த காட்சிகளை எடிட்டிங்கில் நெல்சன் வெட்டி துக்கிவிட்டார் என சொல்லப்படுகிறது.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
