×

மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி... உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்

நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைகிறார். 
 

சிம்பு நடித்திருந்த ஈஸ்வரன் படம் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியானது. சுசீந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், நீண்டநாட்களுக்குப் பிறகு சிம்புவைப் பெரிய திரையில் கண்ட அவரது ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்தனர். இதையடுத்து, கவுதம் கார்த்திக்குடன் பத்து தல, வெங்கட் பிரபுவுடன் மாநாடு என பிஸியாக இருக்கிறார் சிம்பு. 


இந்தநிலையில், சிம்பு - இயக்குனர் கௌதம் மேனன் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. `சகோதரர் கௌதமுடன் மீண்டும் இணைவது’ மகிழ்ச்சி என சிம்பு நெகிழ்ந்திருக்கிறார்.   


இயக்குனர் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் ஏற்கெனவே வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகு நடிப்பு சிறிய இடைவெளி விட்டிருந்த சிம்பு, லாக்டவுனில் உடம்பைக் குறைத்து பழைய லுக்குக்குத் திரும்பினார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News