×

மாஸ்க் போடலயா வந்து குழி தோண்டு - இந்தோனேஷியாவில் வினோத தண்டனை!

இந்தோனேஷியாவில் விதியை மீறுபவர்களுக்கு வினோத தண்டனை

 

சீனாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மனிதர்களுக்கு பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க உள்ள மக்களை தாக்கி பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 51 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸை தடுக்க  6 கோடி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய உட்பட பல நாடுகளில் மக்கள் வெளியே நடமாட விடாமல் ஊரடங்கு உத்தரவு போட்டு நோய் தொற்றினை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனினும் ஐக்கிய நாடுகள் முழுவீச்சில் இறங்கி தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், இந்தோனேஷியாவில் யாரேனும் மாஸ்க் போடாமல் பொதுவெளியில் நடமாடினால் அவர்ளுக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவரின்  சவப்பெட்டி புதைக்க பள்ளம் தோண்ட சொல்லி தண்டனை வழங்கப்படுகிறதாம். காரணம் இப்போதைக்கு அங்கு குழி தோண்ட வெறும் மூன்று பேர் தான் இருக்கிறார்களாம். ஆகையால் விதியை மீறுபவர்களுக்கு இப்படி ஒரு வினோத தண்டனை கொடுக்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News