×

விஜய் சேதுபதிக்கு எழுந்த கடும் எதிர்ப்பு... படக்குழு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை....

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திம் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தயாரிக்கும் தார் மீடியா நிறுவனம் இது பற்றி விளக்கமளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் திரைப்படத்தின் கதையம்சம். 

திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது

என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News