×

கோப்ரா படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகும் கிரிக்கெட் வீரர்  - வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார்.

 

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ’கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும்  ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் மஞ்சள் கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு, 80ஸ் காலத்து ட்ரெஸிங் ஸ்டைலில் முற்றிலும் வித்யாசமாக தோற்றமளித்த விக்ரமின்  புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிய நிலையில் தற்ப்போது  இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கொல்கத்தா ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இன்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கும் தனது கேரக்டர் பற்றியும் பதிவு செய்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News