Categories: Cinema News latest news throwback stories

சுப்பு பஞ்சு நடிகரா தெரியும்… டப்பிங் பேசியது தெரியுமா? அதுவும் இந்த மாஸ் வில்லன் வாய்ஸ் இவரோடது தான்…

தமிழ் சினிமாவில் ரொம்ப முக்கியம் என்றால் மாஸ் வில்லன்களுக்கு கொடுக்கப்படும் வாய்ஸ் தான். அப்படி சுப்பு பஞ்சு டப்பிங் பேசிய படங்கள் உங்களுக்காக.

சுப்பு பஞ்சு

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் தான் சுப்பு பஞ்சு. டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார். பின்னர், 2010ம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்து ரசிகர்களால் அறியப்பட்டார். தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகளும் வந்தது.

அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரீச்சினை கொடுத்தது. ஆனால் சீரியல் மற்றும் சினிமாவில் கலக்கி வரும் சுப்பு பஞ்சு டப்பிங் பேசுவதிலும் ஹிட் அடித்தவர்.

suman

இவர் சிவாஜி திரைப்படத்தின் வில்லன் சுமனுக்காக டப்பிங் பேசி இருக்கிறார். அக்கதாபாத்திரத்தினை இவர் வாய்ஸ் மேலும் வலுவாக மாற்றியது. தொடர்ச்சியாக கந்தசாமி திரைப்படத்தில் முகேஷ் திவாரிக்கு வாய்ஸ் கொடுத்ததும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily