×

100வது படம் நடிகர்களுக்கு வெற்றியா, தோல்வியா? 

 
olivilaku

தற்போதைய காலகட்டத்தில் 100வது படத்தை நடித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்தால் செஞ்சுரி அடிப்பது எப்போது? அடிக்கத் தான் முடியுமா? அதற்குள் வயது போய் விடுமே...என்னும் இக்கட்டான நிலையில் தான் இன்றைய நட்சத்திரங்களின் நிலைமை உள்ளது. 

; தல அஜீத், தளபதி விஜய் போன்ற நடிகர்;களே இப்போதைய சீனியர்கள். இவர்களில் விஜய் மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அஜீத்துக்கு வலிமை 60வது படமாக உள்ளது. இதை வினோத் இயக்குகிறார். 61வது படத்தையும் அவரே இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள்தான் தற்போதைக்கு சீனியர் நடிகர்கள.; இவர்கள் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன.

அக்காலத்தில், எம்.ஜி,ஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, முரளி, விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்கள் ஓரளவு 15 அல்லது 16 வருடங்களுக்குள் 100வது படத்தில் நடித்து முடித்துள்ளனர். 

எம்.ஜி.ஆருக்கு நூறாவது படமாக ஒளிவிளக்கு படம் வந்தது. சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலிதா நடிப்பில் வெற்றிப்படமாக படடையை கிளப்பியது. நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க உள்ளிட்ட பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது. அன்றைய காலகட்டத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல் இது. ஆடல் பாடல், மேடை நிகழ்ச்சி என எது என்றாலும் இப்பாடலும் தவறாமல் இடம்பெறும்.

அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு 100வது படம் நவராத்திரி. முற்றிலும் மாறுபட்ட படமாக வெளியானது. இந்த படத்தில் ஒன்பது வேடங்களில் அந்தக்காலத்திலேயே கலக்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஏ.பி. நாகராஜன் இயக்கி நடிகர் சிவாஜி கணேசனுக்கு பெரும்புகழைத் தேடிக் கொடுத்த படம் இது.

ஜெமினிகணேசனுக்கு சீதா என்ற படமும், ஜெய்சங்கருக்கு இதயம் பறக்கிறது என்ற படமும் 100வது படமாக வந்து வெளியுலகுக்கு தெரியாத படமாகி விட்டது.

முத்துராமனுக்கு பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த புன்னகை 100வது படமாக வந்தது. இது பாலச்சந்தர் இயக்கத்தில் பரவலாக மக்களால் பேசப்பட்ட படம்;.

இவர்களில் உலகநாயகன் கமல் தான் மிக விரைவாக தனது 100 வது படத்தை எட்டினார். ராஜபார்வை தான் அந்தப் படம். படத்திற்குப் பெயர் தான் ராஜபார்வையோ தவிர, படத்தில் கமல் பார்வையற்றவராகவே நடித்திருப்பார். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய இப்படம் போதிய கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் இருந்தாலும் இன்றளவும் பேசப்படும் படமாகவே உள்ளது. அந்திமழை பொழிகிறது என்ற ரம்மியமான பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின்; 100வது படம் ஸ்ரீராகவேந்திரர். அவரது ஆன்மிக குரு ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார். இது ரஜினி நடித்த வித்தியாசமான வேடம் என்ற வகையில் காலத்தால் அழியாத ஆன்மிக வரலாறு என்ற அடிப்படையிலும் இன்றும் பெருமை சேர்க்கும் படமாக உள்ளது. போதிய வசூலை இப்படம் பெறவில்லை என்றாலும் தற்போதும் சினிமா ரசிகர்களிடம் இந்தப்படம் நல்ல பெயரையே வாங்கிக் கொடுத்துள்ளது.

80களில் விஜயகாந்த்துக்கு கேப்டன் பிரபாகரன், சத்யராஜுக்கு பிவாசு இயக்கத்தில் வாத்தியார் வீட்டு பிள்ளை, கார்த்திக்கிற்கு உள்ளத்தை அள்ளித்தா, பிரபுவுக்கு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ராஜகுமாரன் உள்ளிட்ட படங்கள் 100வது படங்களாக வந்தன.

100வது படங்கள் என்று பார்க்கப்போனால் மற்ற நடிகர்களை விட வெற்றியை வாரிக் குவித்தது எந்தெந்த நடிகர்களுக்கு என்றால், நீங்களே அசந்து போவீர்கள். நடிகர் கார்த்திக்;, விஜயகாந்த்;;; தான் அவர்கள். இவர்களின் 100வது படங்கள்தான் தாறுமாறு ஹிட் ஆனது. மற்ற நடிகர்களின் படங்கள் சுமார் ரகம் தான். இருந்தாலும் ரசிகர்களுக்கு நல்லதொரு கருத்தை சொன்ன படமாகவே அவை இருந்தன.

கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் தான் அவருக்கு 100வது படம். இது அவரது சினிமா கேரியரில் பெரிய பிரேக் கொடுத்த படம். இதில்; ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் நடித்திருந்தனர். அவரே எதிர்பாராமல் மிகச்சிறந்த நகைச்சுவை ப்ளாக் பஸ்டர் படம் ஆனது. இயக்கியவர் சுந்தர் சி.

அது போல் விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கேப்டன் பிரபாகரன். திரைப்படமும் மிகச்சிறந்த ப்ளாக் பஸ்டர் படமாகும.; இயக்கம் ஆர்.கே செல்வமணி. இப்படத்தில்; வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் பெரிய அளவில் பேசப்பட்டார்.

100வது பட நாயகர்களில் பெரும் சோகம் யாருக்கு என்றால், நடிகர் முரளிக்குத்தான். 99 படங்கள் நடித்து முடித்து 100வது படமாக கவசம் என்ற படத்தில் நடிக்க இருந்தபோது முரளி திடீர் மரணம் அடைந்து விட்டதால் படம் ட்ராப் செய்யப்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News