×

இப்படி ஒரு வெறித்தனமான விஜய் ரசிகரா? - வைரலாகும் வீடியோ

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் மாஸ்டர் விழாவில் அவர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ஹோட்டலில் நடைபெற்றதால் இடம் போதாக்குறையும் ஒரு காரணமாக இருந்தது. எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சியில் இந்த விழாவை பார்த்து ரசித்தனர்.  

இந்நிலையில், விஜய் பேசிக்கொண்டிருந்த போது தீவிர விஜய் ரசிகர் ஒருவர் கையில் கற்பூரம் ஏற்றி அவருக்கு ஆரத்தி காட்டி வீடியோவை விஜர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து 'இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உங்களை யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது தலைவா' என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News