×

இப்படி செஞ்சுப்புட்டாங்களே! விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சன் டிவி...

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவை லைவ் நிகழ்ச்சி எனக்கூறி ஏமாற்றியும், விஜய் பேசிய முக்கிய கருத்துக்களை நீக்கி விட்டு ஒளிபரப்பியும் விஜய் ரசிகர்களை சன் தொலைக்காட்சி ஏமாற்றியுள்ளது. 
 

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடந்தது. முதலாவதாக இந்த விழாவிற்கு விஜய் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. பிகில் பட விழாவில் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது சர்ச்சை ஆனதால் இது தவிர்க்கப்பட்டதாக விஜயே மேடையில் கூறினார். அடுத்து, இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி என்றே கூறப்பட்டது. எனவே, தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியை காண உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே அந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தது . நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களுக்கு விஜய் வணக்கம் வைக்கும் வீடியோவும், மேடையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டி அணைக்கும் காட்சிகளும், நடிகர் சிம்ரன் மேடையில் நடனமாடும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி விட்டது.

எனவே, நேரடி ஒளிபரப்பு என அறிவிக்கப்பட்டது வெறும் கண் துடைப்பு என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக்கனுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது என விஜய் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. பல ஊடகங்களும் செய்தியை வெளியிட்டு விட்டனர். 

ஆனால், விஜய் பேசும் அக்காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவே இல்லை. பாஜக அரசு கொண்டு அமுல்படுத்தி, நாடெங்கும் எதிர்ப்பை பெற்ற குடியுரிமை சட்ட மசோதா சட்டம் குறித்தே விஜய் பேசியதால், அது சர்ச்சையை ஏற்படுத்தும் என சன் தொலைக்காட்சி அதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியின் இந்த செயல் விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News