×

ஆளானப்பட்ட சிம்புவையே மடக்கிய சுசீந்தரன்… எல்லாத்துக்கும் ஒரு டிரைலர்தான் காரணமாம்!

நடிகர் சிம்பு நடிக்க சுசீந்தரன் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மாநாடு படத்துக்கு முன்னதாகவே திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது.

 

நடிகர் சிம்பு நடிக்க சுசீந்தரன் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மாநாடு படத்துக்கு முன்னதாகவே திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது.

நடிகர் சிம்புவிடம் கால்ஷீட் வாங்கி படம் எடுப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு எளிதான காரியம் இல்லை. அந்த வகையில் நீண்ட இழுபறிக்குப் பின் மாநாடு படத்தை எடுத்து வருகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்நிலையில் இப்போது மாநாடு படத்துக்கு முன்னதாகவே சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு.

சுசீந்தரன் எப்படி சிம்புவை இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லாக்டவுன் காலத்திலேயே சுசீந்தரன் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தின் டிரைலரை சிம்புவிடம் காட்டி அந்த படத்தை எப்படி குறுகிய காலத்தில் படமாக்கி முடித்தோம் எனக் கூறி சிம்புவுக்காக வைத்திருந்த கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளாராம். அந்த கதை பிடித்துப் போனதால் மாநாடு படத்துக்கு முன்னதாகவே சுசீந்தரன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News