×

பிக்பாஸிற்காக தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா அலறியடித்து ஓட்டம்!

பாடகி சுசித்ரா நட்சத்திர ஓட்டிலில் இருந்து அலறியடித்து ஓட்டம்

 

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக கலக்கியவர் சுசித்ரா. இதையடுத்து இவர் காபி வித் சுச்சி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் திரைப்பட பாடகியாகவும் இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். போக்கிரி, மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவரது பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே 2017-ல் பரபரப்பாக பேசப்பட்ட சுச்சி லீக்ஸ் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக பாடகி சுசித்ரா பங்கேற்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது. அதற்காக அவர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 11 மணியளவில் " என்னை கொலை செய்ய வராங்க... கதவை துரங்க என கத்திக்கொண்டே ஓடிவந்துள்ளார். பின்னர் அவரை ஓட்டல் ரிசப்ஷன் ஏரியாவில் சற்று நேரம் அமரவைத்து சமாதானம் செய்துள்ளார். இருந்தும் சில மணி நேரம் அவர் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாராம். பின்னர் விஜய் டிவி தரப்பில் பேசி அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு மீண்டும் அறைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News