த்ரிஷா வெளியிட்ட விஜய்யின் பர்த்டே ஸ்டில் AI மூலம் கிரியேட் பண்ணதா?... பற்ற வைத்த சுசித்ரா!
தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இருந்தவர் தான் நம்ம 'தளபதி' விஜய். இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
ஆனால், விஜய்யோ தனது 69-வது படமான 'ஜன நாயகன்' தான் கடைசி படம் என்று சொல்லிவிட்டு, அரசியலில் என்ட்ரியாகி தமிழ்நாடு முதலமைச்சராகி விட்டார்.
நேற்று முன் தினம் (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள் என்பதால், பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், எப்பவும் வாழ்த்து சொல்லும் நடிகை த்ரிஷா எந்தவித பதிவும் போடவில்லை.
அதற்கு விஜய்யின் ரசிகர்கள் கூட த்ரிஷாவை பாராட்டினார்கள். இதற்கிடையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்து வாழ்த்தினார்.
இந்த ஸ்டில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்தது போல் இருந்தது. தற்போது, பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் "த்ரிஷா ஷேர் செய்திருக்கும் விஜய்யின் புகைப்படம் AI மூலம் கிரியேட் பண்ணது போல் இருக்கிறது" என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.
